சீனாவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய தைவான்

September 2, 2022

தைவான் இராணுவம் முதன்முறையாக சீன கடற்கரையிலிருந்து வந்து அதன் வான்எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது. தைவான் தனக்கு சொந்தமானது என்று கூறும் சீனா, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை எதிர்க்கும் வகையில் தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சிகளை நடத்தியது. இ௫ப்பினும் தைவான் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தைவானை அச்சுறுத்தும் வகையில் சீன ட்ரோன்கள் தைவானைச் சுற்றி இயங்குகின்றன. இந்நிலையில் தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் சீனாவின் […]

தைவான் இராணுவம் முதன்முறையாக சீன கடற்கரையிலிருந்து வந்து அதன் வான்எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

தைவான் தனக்கு சொந்தமானது என்று கூறும் சீனா, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை எதிர்க்கும் வகையில் தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சிகளை நடத்தியது. இ௫ப்பினும் தைவான் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தைவானை அச்சுறுத்தும் வகையில் சீன ட்ரோன்கள் தைவானைச் சுற்றி இயங்குகின்றன. இந்நிலையில் தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டார். சீனாவின் ட்ரோன் ஒன்று கின்மேன் தீவில் உள்ள தைவான் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி பறந்தது. அதைக் கண்ட தைவான் ராணுவம் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதை சுட்டு வீழ்த்தியது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu