தைவான் துணை அதிபர் அமெரிக்க பயணத்தை மேற்கொள்கிறார்

August 12, 2023

தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் இன்று அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இது அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் பராகுவே நாட்டு அதிபர் பதவியேற்பு நிகழ்வுக்காக சென்று திரும்பும் வழியில் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக சந்திப்பு மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை சீனா கண்டித்துள்ளது. இதனால் தைவான் தீவைச் சுற்றி மேலும் இராணுவ நடவடிக்கைகளை சீனா தூண்டக்கூடும் என்று தைவான் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஜனவரியில் நடக்கப்போகும் தைவானின் ஜனாதிபதி […]

தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் இன்று அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

இது அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் பராகுவே நாட்டு அதிபர் பதவியேற்பு நிகழ்வுக்காக சென்று திரும்பும் வழியில் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக சந்திப்பு மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை சீனா கண்டித்துள்ளது. இதனால் தைவான் தீவைச் சுற்றி மேலும் இராணுவ நடவடிக்கைகளை சீனா தூண்டக்கூடும் என்று தைவான் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ஜனவரியில் நடக்கப்போகும் தைவானின் ஜனாதிபதி தேர்தலில் வில்லியம் லாய் முன்னணியில் உள்ளார். தைவானும் அமெரிக்காவும் இதுபோன்ற சந்திப்புகள் வழக்கமானவை என்று கூறினாலும் சீனா இதனை விரும்பவில்லை. தைவான் சுதந்திரத்திற்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவாகவே இந்நிகழ்வை சீனா எதிர்கொள்கிறது.

தைவானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை அச்சுறுத்த சீனா அடுத்த வாரம் தைவான் அருகே இராணுவ ஒத்திகையை தொடங்கும் எனநம்பப்படுகிறது. ஏனெனில், முன்பொருமுறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தைவானின் தற்போதைய நிலையை மாற்ற விரும்பவில்லை என லாய் கூறியிருந்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu