ஆப்கானிஸ்தான் - தாலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல்

February 16, 2023

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்காணி, தாலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல் நிலவுவது போல பொதுவெளியில் பேசியுள்ளார். இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. கோஸ்ட் பிராந்தியத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மதக் கல்விக்கான பட்டமளிப்பு விழாவில் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உரையாற்றினார். அப்போது அவர், தாலிபான் ஆட்சியாளர்கள் இடையே பெண் கல்விக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து மோதல் இருப்பதை வெளிப்படுத்தினார். அவர், "ஆட்சி அதிகாரத்தை ஏகபோகமாக கையில் எடுப்பது, ஒட்டுமொத்த அமைப்பின் பெயரை சிதைப்பது […]

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்காணி, தாலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல் நிலவுவது போல பொதுவெளியில் பேசியுள்ளார். இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.

கோஸ்ட் பிராந்தியத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மதக் கல்விக்கான பட்டமளிப்பு விழாவில் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உரையாற்றினார். அப்போது அவர், தாலிபான் ஆட்சியாளர்கள் இடையே பெண் கல்விக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து மோதல் இருப்பதை வெளிப்படுத்தினார். அவர், "ஆட்சி அதிகாரத்தை ஏகபோகமாக கையில் எடுப்பது, ஒட்டுமொத்த அமைப்பின் பெயரை சிதைப்பது போன்றதாகும். அதிகாரத்திற்கு வந்திருப்பதன் மூலம் நமது பொறுப்பு கூடி உள்ளது. பொறுமையுடனும், நல்ல அணுகுமுறையுடனும், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களது காயங்களைப் போக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நடவடிக்கைகளால், பொதுமக்கள் நம்மையும் நமது மதத்தையும் வெறுக்கும் படி ஆகிவிடக் கூடாது" என்று பேசியுள்ளார்.

அவரது உரையில், ஹிபதுல்லா அகுண்ட்சதாவின் பெயரை குறிப்பிடப்பட்டவில்லை என்ற போதும், அவரைத் தாக்கி பேசியதாகவே கருதப்படுகிறது. தாலிபான் ஆட்சியாளர்கள் பொதுவெளியில் பேசுவதே அரிது. அதிலும், இவ்வாறு கருத்து மோதல் இருப்பதை வெளிப்படுத்தி இருப்பது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தாலிபான் அரசியல் தலைவர்கள் விசாலமான பார்வை கொண்டிருந்தாலும், மதத்தலைவர்கள் பழமைவாதிகளாக இருப்பதால் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu