பாகிஸ்தான் நாட்டின் ராணுவ நிலைகள் மீது தலிபான் தாக்குதல் நடத்தினர்.
சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு தலிபான் இயக்கம் தான் காரணம் என்று பாகிஸ்தான் கூறுகிறது. இது குறித்து பாகிஸ்தானுக்கான தூதர் ஆசிப் துரானி கூறுகையில், பஹரித் ஈ தலிபான் அமைப்பை சேர்ந்த சுமார் 6000 பயங்கரவாதிகள் சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தானுக்குள் குடி பெயர்ந்துள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது. இதன் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்றார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், ஆக்டிகா போன்ற தலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக தலிபான் அரசு கனரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக தலிபான் கூறுகையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லைப்படை கனரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். எந்த சூழ்நிலையிலும் இராணுவம் எங்களுடைய பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் என்றது.