தமிழ் மொழியை 2வது மொழியாக அறிமுகம் செய்வதற்கு அந்தந்த மாநில முதல்வர்களுடன் பேசி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு கல்வி வளர்ச்சியை நாடு நீண்ட காலமாக அறிந்துள்ளது. தாய் மொழியின் மூலம் தான் அறிவை நாம் வளர்க்க முடியும். வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை 2வது மொழியாக கொண்டு வர அந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் பேசியுள்ளேன் என்று அவர் கூறினார்.