ஈரான் ராணுவம் இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பலை சிறைபிடித்தது. அதில் உள்ள 17 இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மீது குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஈரான் படையின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான் என ஈரான் குற்றம் சாட்டியது. மேலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஓமன் ஐக்கிய அரபு அமீரகம் கத்தார்,பக்ரைன் நடுவே உள்ள கடற் பகுதியில் ஓர்மூஸ் ஜலசந்தியில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பலை ஈரான் ராணுவம் சிறைபிடித்தது. இதில் உள்ள 17 இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.