தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து வந்தவர் சண்முகசுந்தரம் ஆவார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது பதவி விலகி உள்ளார்.
வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவரது முடிவு தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டு, அதன்படி அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 ல், திமுகவின் ஆட்சி அமைந்ததும் சண்முகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவர் பதவி விலகி உள்ளதால், தமிழக அரசின் அடுத்த தலைமை வழக்கறிஞராக பி எஸ் ராமன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது.