தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

February 20, 2024

இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை உருவாக்க ரூபாய் 38 லட்சம் நிதி ஒதுக்கீடு விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூபாய் 27 கோடி நிதி ஒதுக்கீடு பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட 3.60 கோடி நிதி […]

இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம்

உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை உருவாக்க ரூபாய் 38 லட்சம் நிதி ஒதுக்கீடு

விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூபாய் 27 கோடி நிதி ஒதுக்கீடு

பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட 3.60 கோடி நிதி ஒதுக்கீடு

100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு

2482 ஊராட்சிகளை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் இணைத்து செயல்படுத்த ரூபாய் 200 கோடி நிதி

பயறு பெருக்கு திட்டம் 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூபாய் 40.27 கோடி நிதி ஒதுக்கீடு

துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூபாய் 17.50 கோடி நிதி ஒதுக்கீடு

எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடி 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட ரூபாய் 45 கோடி நிதி ஒதுக்கீடு

எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு

சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 12, 500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்திற்கு ரூபாய் 18 லட்சம் நிதி ஒதுக்கீடு

சிறுதானியங்கள் பயிறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூபாய் 35 கோடி நிதி ஒதுக்கீடு

நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு

ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu