தமிழக வேளாண் விஞ்ஞானி எம் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது

February 9, 2024

மத்திய அரசு முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதில் மிகுந்த பெருமை அடைவதகாவும், அவர் சிறந்த அறிஞராகவும் அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை அவர் அமைத்தார். இவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்தது எனவும் […]

மத்திய அரசு முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதில் மிகுந்த பெருமை அடைவதகாவும், அவர் சிறந்த அறிஞராகவும் அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளத்தை அவர் அமைத்தார். இவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தை அடைந்தது எனவும் பாராட்டியுள்ளார். அதேபோன்று முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவாது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அதேபோல் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu