தமிழக சட்டசபை கூட்டம் 11-ந்தேதி வரை நடைபெறும்

January 7, 2025

தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்றது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு சட்டசபை கூட்டம் 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 7-ந்தேதி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். 8-ந்தேதி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் […]

தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்றது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு சட்டசபை கூட்டம் 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 7-ந்தேதி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

8-ந்தேதி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படுவதாகவும், 9 மற்றும் 10-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என அவர் கூறினார். 11-ந்தேதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளிப்பார். அவரது கருத்தில், தமிழ்நாட்டில் ஆளும் அரசு விழாக்களில் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவது மரபாக உள்ளது, மேலும், கவர்னர் உரை வாசிப்பது அவரது விருப்பமோ, இல்லையோ அதை மாற்ற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu