தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்.21-ந்தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு 

March 20, 2023

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். […]

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதம் 23,24,27,28-ம் தேதிகளில் நடைபெறும். காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu