மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

January 23, 2024

இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் வசித்து […]

இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஆரோக்கியமான பாதுகாப்பான குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்கைகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மகளிர் கொள்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மாநில அரசுக்கு என தனியாக மகளிர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்தான முக்கிய முடிவுகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu