முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய செயலாளர்கள் நியமனம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயலாளர்களின் மாற்றங்களை அறிவித்துள்ளார். 1-வது தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 2-வது தனி செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3-வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். முருகானந்தம் தலைமை செயலாளராக பதவியேற்கிறார். உமாநாதுக்கு 13 துறைகள், சண்முகத்திற்கு 12 துறைகள், அனு ஜார்ஜிற்கு 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லட்சுமிபதிக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.














