தமிழக கோர்ட்டுகளில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

April 29, 2024

தமிழக கோர்ட்டுகளில் உள்ள 2329 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஐகோர்ட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கும் தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு […]

தமிழக கோர்ட்டுகளில் உள்ள 2329 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஐகோர்ட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கும் தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு ஏதாவது ஒரு மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒரே விதமான பதவிக்கான பொது எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு ஆகியவை அந்தந்த மாவட்டங்கள் அல்லது வேறு இடங்களில் ஒரே நாளில் நடைபெறும். எனவே விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே நடத்தப்படும். நேர்மையற்ற முறையில் வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் மோசடியாளர்கள் மற்றும் தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு கட்டணத்தை மே 29ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu