தமிழ்நாடு மின்வாகன கொள்கையை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

February 14, 2023

2023 தமிழ்நாடு மின்வாகன கொள்கையை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரித்திடும் நோக்கத்திலும், விநியோகம், தேவைகள் / பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற திருத்திய கொள்கையை […]

2023 தமிழ்நாடு மின்வாகன கொள்கையை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை வெகுவாக அதிகரித்திடும் நோக்கத்திலும், விநியோகம், தேவைகள் / பயன்பாடுகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற திருத்திய கொள்கையை இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த கொள்கை, வெளியிடப்பட்ட தினத்திலிருந்து ஐந்து வருடங்கள் நடைமுறையில் இருக்கும். மின்வாகன உற்பத்தித்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தமிழ்நாடு மின் வாகன கொள்கை 2023 யின் முக்கிய நோக்கமாகும். மேலும் இக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu