அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான 2024-25 கலந்தாய்வு தொடங்கிய நிலையில், மாணவர்கள் தங்களின் விருப்பங்களை சீராக பதிவுசெய்ய வேண்டும் என்பதே அதிகாரிகளின் அறிவுரை.
417 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் இணையவழி கலந்தாய்வில் இந்த ஆண்டு 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2.41 லட்சம் பேர் தகுதி பெற்று ஜூலை 7 முதல் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர். சிறப்புப் பிரிவுகளுக்கான கலந்தாய்வில் வெறும் 994 இடங்கள் மட்டுமே நிரம்ப, தற்போது பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று முதல் துவங்கியுள்ளது. முதல் சுற்றில் 39,145 பேர் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் ஜூலை 16க்குள் விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 17-ந்தேதி வெளியிடப்படும். உறுதி செய்த மாணவர்களுக்கே இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும். சேர்க்கை பற்றிய முழுமையான தகவல்களுக்கு tneaonline.org என்ற வலைதளத்தை பார்வையிடலாம்.