முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்தியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப குழுவின் ஆய்வுக்கு பின்னர் அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனை தடுக்க கேரள அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையை விட 10 மடங்கு அதிகம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இதுவரை நிலநடுக்க கருவி பொருத்தவில்லை. எனவே அந்த கருவிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.