ஸ்மோக் பிஸ்கட் உயிருக்கு ஆபத்து தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

April 25, 2024

ஸ்மோக்கிங் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வலியால் துடித்த வீடியோ வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் குழந்தைகள் ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ளக்கூடாது என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். இவை உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவிற்கு குளிர்ச்சியாக […]

ஸ்மோக்கிங் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வலியால் துடித்த வீடியோ வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் குழந்தைகள் ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ளக்கூடாது என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். இவை உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவிற்கு குளிர்ச்சியாக உள்ளது. இதை எடுத்துக் கொள்ளும் பொழுது திசுக்கள் உறைந்து இரைப்பை குழாயை சிதைக்கிறது. மேலும் உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக் கூடாது மீறி பயன்படுத்தினால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நைட்ரஜன் உணவு பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu