ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மோசமான காயம் அல்லது தீவிர நோய் தாக்கம் காரணமாக வலியால் அவதிப்படும் தெரு நாய்களுக்கு கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு கால்நடைத் துறை வெளியிட்ட அரசாணையில், பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருணைக் கொலை செய்யப்பட்ட நாய்கள் குறித்து உரிய ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சாலையில் சுற்றித் திரியும் விலங்குகளை கட்டுப்படுத்தும் மாநில கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.