கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6,350 பேர் வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நேற்று 76 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு இன்று அவசர ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவற்கான விதிமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பயப்பட தேவை இல்லை. கொரோனா கட்டுப்பாட்டை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.














