தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்குத் திட்டமிடல் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊதியம் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் .
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதம் 1-ந்தேதி அவரவரின் வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்குத் திட்டமிடல் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊதியம் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என அரசு தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 2-ஆம் தேதி அவர்களின் வங்கி கணக்கில் சேமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.