தமிழகத்தில் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் பங்கேற்றனர். இந்நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.tnpscresults.tn.gov மற்றும் www.tnpscexams.in இணையதளங்களில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.














