தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சு கொல்லி மருந்துகளுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரபனோபாஸ் + சைபர்மெத்ரின், குளோரோபைரிபாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரிபாஸ் மருந்துகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு விதமான ஆய்வுகள் அடிப்படையில், தமிழகத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு வேளாண்துறையானது மேற்கண்ட பூச்சு கொல்லி மருந்துககளை தற்காலிகமாக 60 நாட்களுக்கு தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளும் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதால் இதனை தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் வாங்கி பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. தற்போது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்காலிகமாக தடைசெய்வதாக வேளாண்மைத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














