தமிழக அரசுக்கு ஹெலிகாப்டர் மற்றும் விமானம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுவாக பல மாநில அரசுகள் சொந்தமாக ஹெலிகாப்டர்களை வைத்துள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், வெள்ள பாதிப்பின்போது சேத விவரங்களை கணக்கிடுதல் மற்றும் பல்வேறு உதவிகள் செய்வதற்கும் ஹெலிகாப்டர்கள் பயன்படுகிறது.
இந்த நிலையில், தமிழகம் சொந்தமாக ஹெலிகாப்டர் அல்லது தனி விமானம் வைத்திருக்கவில்லை என்பது ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு ஹெலிகாப்டர் மற்றும் விமானம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களின் மூலம் எழுந்து வருகிறது.