அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று ஆளுநர் ரவி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசேகரன் என்ற நபரை கைது செய்தனர். அவர் மட்டுமே குற்றவாளி என போலீசாரும், அரசு தரப்பும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஆய்வு செய்ய உள்ளார்.