தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித் திமுக குழு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் புகார் மனுவை அளித்தது. இதே போன்று, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.