தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது -உயர்நீதிமன்றம்

December 7, 2022

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அதில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் மருத்துவ கவுன்சில் தேர்தலின் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தன. சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திரா பல்கலைக்கழக செனட் உறுப்பினரையும், […]

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அதில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் மருத்துவ கவுன்சில் தேர்தலின் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தன. சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திரா பல்கலைக்கழக செனட் உறுப்பினரையும், விசாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி டாக்டர்களையும் எப்படி நியமிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில், இந்த சட்டமும், விதிகளும் 3 மாதங்களில் முழுமையாக திருத்தப்படும் என்று கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆந்திர மாநில உறுப்பினர்களை நீக்கிவிட்டு, சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் தமிழக அரசு 3 மாதங்களில் முழுமையாக திருத்தம் செய்ய வேண்டும். அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்தும் விதிகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu