நாட்டில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது
மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில், தமிழ்நாடு நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பில் முதன்மை மாநிலமாக அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 15.66% தமிழ்நாட்டில் உள்ளன. மேலும், 15% தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்கின்றனர். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.