துப்பாக்கி சுடுதல் போட்டியில் 12 வயதில் பதக்கம் வென்ற தமிழக வீரர்

January 29, 2024

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயதான எஸ்.எம்.யுகேன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் டிராப் கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது யுகன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் நிலா ராஜா பாலுடன் இணைந்து 125 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து யுகன் கூறுகையில் கேலோ இந்திய இளைஞர் […]

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயதான எஸ்.எம்.யுகேன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் டிராப் கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது யுகன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் நிலா ராஜா பாலுடன் இணைந்து 125 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து யுகன் கூறுகையில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டில் பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது எனவும், தனக்கு ஆதரவாக பெற்றோருக்கு பதக்கத்தை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டியில் 125 இலக்குகளில் 108 புள்ளிகளை பெற்றுள்ளதால் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu