டிசம்பரில் தமிழகத்தின் தனி கல்விக் கொள்கை தாக்கல்: அமைச்சர் அன்பில் மகேஷ்

November 10, 2022

தமிழகத்தின் தனிக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேசியக் கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதல்வர் எதிர்த்து வருகிறார். அதற்காக தமிழகத்திற்கென மாநிலக் கல்வி கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் மாநிலக் […]

தமிழகத்தின் தனிக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேசியக் கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதல்வர் எதிர்த்து வருகிறார். அதற்காக தமிழகத்திற்கென மாநிலக் கல்வி கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu