அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்

July 12, 2024

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் ஐ டி என் டி ஹப், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாம் ஆண்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, அமேசான், மைக்ரோசாப்ட், டி லேப் இன்குபேட்டர், TANCAM, TANSAM, டசால்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. விழாவில் […]

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் ஐ டி என் டி ஹப், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாம் ஆண்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, அமேசான், மைக்ரோசாப்ட், டி லேப் இன்குபேட்டர், TANCAM, TANSAM, டசால்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. விழாவில் பங்கேற்ற தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறினார். மேலும், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையாக தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டு வரும் முயற்சியில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu