மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இணையத்தில் 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை இ-வர்த்தக தளங்களில் விற்பனை செய்யும் பணியில் முன்னேற்றம் பெற்று வருகிறது. 4 மண்டலங்களில் நடத்தப்பட்ட இ-வர்த்தக சேவை முகாம்களில், அமேசான், பிஃளிப்கார்ட், மீஃசோ, இந்தியா மார்ட், பூம், ஜெம் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த முகாமின் மூலம், 2,296 பொருட்கள் இ-வர்த்தக தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை, இ-வர்த்தகத்தின் மூலம் ரூ.24.48 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், இந்த முயற்சியினை முன்னிட்டு, சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது