தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
11-வது புரோ கபடி லீக் போட்டி, ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில், 12 அணிகள் தங்களுக்குள் இரண்டு முறை மோதுகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆட்டத்தில் ஆரம்பத்தில் கடும் போட்டி நடந்து, இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இறுதியில், 35-34 என்ற புள்ளியுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இது அவர்களது நான்காவது வெற்றியாகும்.