தமிழ் ஆளுமைகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சினியாகோவா-டவுன்சென்ட் ஜோடி சாம்பியன்!ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சினியாகோவா-டவுன்சென்ட் ஜோடி வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீ வெற்றிபெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக் நாட்டின் கேடரினா சினியாகோவா மற்றும் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் தைவானின் ஹ்சீஹ் சு […]
ஐ.நா.ஊழியர்கள் உள்பட 153 பேர் விடுதலை - ஹவுதிஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவன ஊழியர்கள் 153 பேரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கிடையில் ஓராண்டு நீடித்த போரின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில், ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு அளிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு மேற்கொண்ட தாக்குதலில், மாலுமிகளை கைது செய்துள்ளனர். மேலும், ஏமனில் ஐ.நா. ஊழியர்கள் மற்றும் […]
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 18 பேர் பலிநைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்தில் பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் இனுகு மாகாணத்தில் நேற்று மாலை, பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி முன்னே சென்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்ததால், 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுளின் சிறப்பு டூடுல் வெளியீடுபன்முக இந்தியா மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலைப் படைப்பு கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது வழக்கமான சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சார பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் ஆடைகள் காட்சி அளிக்கின்றன. லடாக்கி உடையில் பனிச்சிறுத்து, வேட்டி-குர்தா அணிந்த 'புலி' உள்ளிட்டது இதில் இடம்பெற்றுள்ளன. இந்த டூடுல், சர்ரியலிசம் கலை இயக்கத்தின் கூறுகளை கொண்ட […]
மேலும் படிக்க

கலைகள்

மேலும் படிக்க
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu