அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் வென்ற தமிழக பெண்

December 12, 2022

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெண் வெற்றி பெற்றுள்ளார். கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 'சர்வதேச மக்களின் தேர்வு' அழகி பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது. […]

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெண் வெற்றி பெற்றுள்ளார்.

கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 'சர்வதேச மக்களின் தேர்வு' அழகி பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது. இவர் மனநல சிகிச்சை நிபுணர், பெண் தொழில்முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர் . கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 'மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' அழகி போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu