தமிழகத்தில் ஜி.எஸ்.டி., வருவாய் 8,551 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 8,637 கோடி ரூபாயும் அக்டோபரில் 9,540 கோடி ரூபாயும் வசூலானது. நவம்பரில் 8,551 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது 2021 நவம்பரில் வசூலான 7,795 கோடி ரூபாயை விட 10 சதவீதம் அதிகம்.
நாட்டின் ஜி.எஸ்.டி., வருவாயில் தமிழகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., வரி வசூல் 172 கோடி ரூபாயில் இருந்து 22 சதவீதம் வளர்ச்சி அடைந்து 209 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.