தமிழக அரசு 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிக்கையை சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ளார். அதில் பி.சங்கர் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராகவும், எஸ் பிரபாகர் தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராகவும் மற்றும் முதலமைச்சரின் முகவரி துறையின் மக்களுடன் முதலமைச்சர் திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஆகியோர்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.