சட்டவிரோத பணிப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14 ஆம் தேதி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
அங்கு அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொழுது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 21ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அவருடைய நீதிமன்ற காவல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது..
இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட காரணத்தினால் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று காவிரி மருத்துவமனையில் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டார். பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு அறை மாற்றப்பட உள்ளது. மேலும் அவரை சிறை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள் என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.