முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மழை பாதிப்புகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள், நிவாரணப் பணிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், குறித்த பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.