ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் - மு.க. ஸ்டாலின்

ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்குரூ. 5 லட்சம் இழப்பீடு, காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டதும் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். அதோடு தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இன்று நடைபெற […]

ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்குரூ. 5 லட்சம் இழப்பீடு, காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டதும் ஒடிசா முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். அதோடு தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனிடையே சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் முக ஸ்டாலின் கூறியதாவது : "ஒடிசா ரெயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசினேன். ஒடிசாவில் தங்கியிருந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டு அறை நேற்றிரவு முதல் செயல்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உதவி அழைப்புக்காக செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்துக்குரூ. 5 லட்சம் இழப்பீடு. காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu