தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன் பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பெயரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் பல்கலைக்கழகத்தில் 40 பேருக்கு தகுதி இல்லாமல் பணியிடங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 2019-ஆம் ஆண்டு இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை, திருவள்ளுவனிடம் பதவி காலத்தை முடிப்பதற்கு முன் விளக்கம் கேட்டுள்ளது.