டேங்கர் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஐஓசி நிர்வாகத்தை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டிப்பதற்காக சென்னை மற்றும் ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை என்னூறில உள்ள ஐஓசி யூனிட் முன்பு 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னதாகவே லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஐஓசி […]

டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஐஓசி நிர்வாகத்தை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டிப்பதற்காக சென்னை மற்றும் ஆசனூர் டேங்கர் லாரி பெட்ரோலியம் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை என்னூறில உள்ள ஐஓசி யூனிட் முன்பு 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னதாகவே லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஐஓசி நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால் மக்களுக்கு பெட்ரோல், டீசல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து சங்க நிர்வாகி கூறுகையில், 15 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu