தான்சானியா அதிபர் இந்தியா வருகை -பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய முடிவு

October 10, 2023

தான்சானியா நாட்டு அதிபர் சாமியா சுளுகு ஹசன் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்து பேசினார். இந்திய ஜனாதிபதி திரௌபதி மூர்முவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இந்தியா மற்றும் தான்சானியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தான்சானியா அதிபரின் வருகையின் போது, இந்தியா மற்றும் தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கலாச்சாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள், வர்த்தக கப்பல் பயணம், டிஜிட்டல் மயமாக்கல், தகவல் பரிமாற்றம் […]

தான்சானியா நாட்டு அதிபர் சாமியா சுளுகு ஹசன் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்து பேசினார். இந்திய ஜனாதிபதி திரௌபதி மூர்முவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இந்தியா மற்றும் தான்சானியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தான்சானியா அதிபரின் வருகையின் போது, இந்தியா மற்றும் தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கலாச்சாரம், விளையாட்டு, கடல்சார் தொழில்கள், வர்த்தக கப்பல் பயணம், டிஜிட்டல் மயமாக்கல், தகவல் பரிமாற்றம் ஆகிய பிரிவுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் தான்சானியா நாடுகளின் நீண்ட கால நட்புறவு, மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த 5 ஆண்டு கால திட்டத்தை தீட்டி பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu