ஈரோடு: தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27 வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

February 18, 2023

தமிழ்நாட்டில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, (தேர்தல் முடியும் வரை) மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளுக்கும் […]

தமிழ்நாட்டில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, (தேர்தல் முடியும் வரை) மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மார்ச் 2ம் தேதி, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி உள்ள 5 கிலோமீட்டர் பகுதிக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினங்களில் மது விற்பனையில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu