கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை படி, நிறுவனத்தின் நிகர லாபம் 9% உயர்வை பதிவு செய்துள்ளது. அதனால் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 10 ரூபாய் டிவிடெண்ட் ஆக வழங்க நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 12040 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செயல்பாட்டு வருவாய் 5.4% உயர்ந்து 62613 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள மொத்த ஆர்டர்கள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் 13.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டர்கள் கிடைத்துள்ளது.