டாடா குழுமத்தை சேர்ந்தடாடா எலக்ட்ரானிக்ஸ், விஸ்ட்ரான் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்கி உள்ளது.
விஸ்ட்ரான் இன்ஃபோகாம் மேனுஃபாக்சரிங் நிறுவனத்தின் இந்திய பிரிவை டாடா எலக்ட்ரானிக்ஸ் வாங்கி உள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில், டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதில் இணையும் முதல் இந்திய நிறுவனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரந்தீர் தாக்கூர், “விஸ்ட்ரான் நிறுவனத்தின் கையகப்படுத்தலில் மகிழ்ச்சி கொள்கிறோம். இது மிக முக்கிய மைல்கல் ஆகும். இந்திய அரசாங்கத்திடமிருந்து உற்பத்தி துறைக்கான ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது” எனக் கூறியுள்ளார். மேலும், விஸ்ட்ரான் குழுமம் அளித்து வந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.