வரலாற்றில் முதல் முறையாக, டாடா குழுமம் 30 லட்சம் கோடி சந்தை மதிப்பை தாண்டி உள்ளது. குறிப்பாக, டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே 15 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி, டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 30 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மேலும், 30 லட்சம் கோடி இலக்கை தாண்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை டாடா குழுமம் படைத்துள்ளது. டாடா குழுமத்தில் அதிக முன்னேற்றத்தை பதிவு செய்த நிறுவனங்களாக டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் ஆகியவை உள்ளன. நடப்பாண்டில் மட்டும், டிசிஎஸ் 9%, டாடா மோட்டார்ஸ் 20% , டாடா பவர் 18% , இந்தியன் ஹோட்டல்ஸ் 16% அளவில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.














