பிரிட்டனில் 4 பில்லியன் பவுண்டு மதிப்பில் மின்சார வாகன பேட்டரி ஆலை - டாடா அறிவிப்பு

July 19, 2023

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமம், இந்தியாவுக்கு வெளியில் தனது முதல் ஜிகா ஆலையை அமைக்க உள்ளது. பிரிட்டனில் மின்சார வாகனங்களுக்கான புதிய பேட்டரி ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதன் மூலம், வாகன துறையில் டாடா குழுமம் சர்வதேச கவனம் பெற உள்ளது. இதுகுறித்து பேசிய டாடா சன்ஸ் சேர்மன் என் சந்திரசேகரன், “ஐரோப்பாவின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பு ஆலைகளுள் ஒன்றாக பிரிட்டனில் அமைக்கப்படும் ஆலை திகழும். இதனை […]

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமம், இந்தியாவுக்கு வெளியில் தனது முதல் ஜிகா ஆலையை அமைக்க உள்ளது. பிரிட்டனில் மின்சார வாகனங்களுக்கான புதிய பேட்டரி ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதன் மூலம், வாகன துறையில் டாடா குழுமம் சர்வதேச கவனம் பெற உள்ளது.

இதுகுறித்து பேசிய டாடா சன்ஸ் சேர்மன் என் சந்திரசேகரன், “ஐரோப்பாவின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பு ஆலைகளுள் ஒன்றாக பிரிட்டனில் அமைக்கப்படும் ஆலை திகழும். இதனை அமைப்பதில் டாடா குழுமம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. இதற்காக, 4 மில்லியன் பவுண்ட் அளவில் முதலீடுகள் செய்யப்பட உள்ளன. எங்கள் குழுமத்தை சேர்ந்த ஜே எல் ஆர் நிறுவனம் மூலம் இந்த ஆலை கட்டமைக்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளார். அதே வேளையில், ‘2030 ஆம் ஆண்டுக்குள் வாகனத் துறைக்கு தேவைப்படும் பாதி அளவுக்கு கூடுதலான பேட்டரி உற்பத்தி பிரிட்டனில் பூர்த்தி செய்யப்படும்’ என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், ‘கார்பன் ஜீரோ அளவை எட்டுவதற்கான முயற்சியில் இது முக்கிய மைல்கல் ஆக இருக்கும்’ என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu