கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் ஆப்பிள் ஐபோன் ஆலையை டாடா குழுமம் வாங்க உள்ளதாக தகவல்

November 30, 2022

டாடா குழுமம், ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் கர்நாடகா ஆலையை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 4000 - 5000 கோடி ரூபாய்க்கு, கர்நாடகா விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்க, டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில், சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில், கொரோனா காரணமாக வன்முறை வெடித்தது. இதனால், அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. அந்த […]

டாடா குழுமம், ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் கர்நாடகா ஆலையை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 4000 - 5000 கோடி ரூபாய்க்கு, கர்நாடகா விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்க, டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில், சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில், கொரோனா காரணமாக வன்முறை வெடித்தது. இதனால், அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஓசூரில் அமைந்துள்ள டாடா குழுமத்தின் மின்னணு நிறுவனத்திடம் இருந்து விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிப்புக்கான மின்னணு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே, உற்பத்தி ஆலையை டாடா கையகப்படுத்தும் நடவடிக்கை எளிமையானது என்று கூறப்படுகிறது. எனினும், ஆப்பிள் ஐபோன் உற்பத்தியில், இரண்டு நிறுவனங்களும் இணைந்தே செயல்படும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu