பாகிஸ்தான் பொருளாதாரத்தை முந்திய டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு

February 19, 2024

டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை விட கூடுதலாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை 341 பில்லியன் டாலர்களாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு 365 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் பொருளாதாரத்தை விட இந்திய நிறுவனம் ஒன்றின் சந்தை மதிப்பு கூடுதலாக உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பு 170 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. […]

டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை விட கூடுதலாக உள்ளது.

சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை 341 பில்லியன் டாலர்களாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு 365 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் பொருளாதாரத்தை விட இந்திய நிறுவனம் ஒன்றின் சந்தை மதிப்பு கூடுதலாக உள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பு 170 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. இந்த ஒற்றை நிறுவனத்தின் மதிப்பு பாகிஸ்தான் பொருளாதாரத்தின் பாதி அளவு ஆகும். டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட இதர டாடா குழும நிறுவனங்கள் தொடர் உயர்வை சந்தித்து வருவதாலும், பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ந்து நலிந்து வருவதாலும், இந்த ஒப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu